
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 21-
பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழன் விருதுகள் வழங்கும் விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.
பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் இந்த விழா சிறப்பாக நடைபெறவுள்ளது என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு தமிழன் விருதுகள் 15 பேருக்கு வழங்கப்பட்டது.
இம்முறையும்
விளையாட்டு, கலை, விவசாயம், சட்டத்துறை, ராணுவம், சிறைச்சாலை, தகவல் தொழில்நுட்பம், ஊடகம் உட்பட மொத்தம் 30 பிரிவுகளில் தமிழன் விருதுகள் வழங்கப்படவிருப்பதாக உமா காந்தன் தெரிவித்தார்.
ஒரு தமிழன் என்ற இயக்கத்தின் மூலம் இந்த விருதளிப்பு விழா முன்பு நடத்தப்பட்டது.
ஆனால் இம்முறை புரட்சி இயக்கம் மற்றும் எனப்படும் ஐசெட் இயக்கத்தின் மூலம் விருதளிப்பு விழா நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக 15 விருதுகள் வழங்கப்படவிருப்பதாக உமா காந்தன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
தமிழன் விருதளிப்பு விழா ஏற்பாட்டுக் குழு தலைவராக திவாஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், அவரின் அரசியல் செயலாளர் ரவிந்திரன், கவிமாறன், வழக்கறிஞர் தினேஷ் முத்தல் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

