இந்தியாவின் மாபெரும் வர்த்தக நிறுவனத் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்

இந்தியாவின் மூன்று மாபெரும் நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.

டாடா குழுமம், இமாமி அக்ரோ டெக் லிமிடெட், எச்சிஎல் டெக்னோஜிஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட இம் மூன்று பெரு வர்த்தக இந்திய நிறுவனங்களாகும். பிரதமரின் மூன்று நாள் பயணத்தின் கடைசி கட்டமாக இந்த சந்திப்பு அமைந்தது.

அவரும் மலேசியக் குழுவினரும் கடந்த திங்கட்கிழமை புதுடில்லிக்கு சென்றடைந்தனர். இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, பல வணிகங்களை இயக்கும் நாட்டின் மிகப் பழமையான பன்னாட்டு நிறுவனமாக டாடா குழுமம் விளங்குகிறது.

TCS, வர்த்தக அமைப்பின் தலைவர் உஜ்வல் மாத்தூர், இந்தியாவின் சமையல் எண்ணெய்கள் மற்றும் உணவுப் பொருட்கள் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் இமாமி அக்ரோடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனுஷ் கோயங்கா, HCL டெக்னாலஜிஸ், நிர்வாக இயக்குநரும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியுமான சி. விஜயகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோரில் முக்கியமானவர்கள் ஆவர்

இச்சந்திப்பின் வாயிலாக மலேசியாவில் முதலீடு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles