
மூன்று நாள் இந்தியாவுக்கான அதிகாரபூர்வ பயணம் 8 பில்லியன் ரிங்கிட் சாத்தியமான வர்த்தகத்தை அடைவதில் வெற்றி பெற்றது.
மேலும் 4.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டையும் நாட்டில் உள்ள பல்வேறு துறைகள், நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
இரசாயனப் பொருட்கள், எண்ணெய், எரிவாயு, விமானம் போன்றவற்றுடன் செம்பனை உட்பட இந்தியாவின் முக்கிய தொழில்துறை சார்ந்தவர்களுடனான சந்திப்பின் வாயிலாக இது சாத்தியமானது.
அதே நேரத்தில், இப் பயணத்தின் வாயிலாக இரு நாடுகளையும் உள்ளடக்கிய வணிகங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
மேலும் மலேசிய அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மலேசியா, இந்திய வர்த்தகத்தின் மதிப்பு 72.31 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
மேலும் மார்ச் 2024இல் மொத்தம் 168 முதலீட்டு திட்டங்கள் 4.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் பெறப்பட்டது.
இதன் மூலம் 16,640 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.

