
ஜொகூரில் பேய் வேடமணிந்த பெண்மணிக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் வார இறுதியில் கைதான நிலையில் அவருக்கு உரிய சேவைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மலேசிய மனநல சுகாதார சங்கத்தின் தலைவர் டாக்டர் அன்ட்ரூ மோகன்ராஜ் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதனால் அவர் தவறான காரியத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க இயலும் என்று அவர் விவரித்தார்.
ஒருவேளை மனநல பாதிப்பு கொண்டிருந்தால் அவருக்கு முறையான சிகிச்சை தேவைப்படும். இருந்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைச்சாலையில் மனநல வசதிகள் கொண்ட அறையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தின் ஜாலான் ஆஸ்டின் ஹைட்ஸ் சாலையின் அருகே மனநல பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் பேய் வேடமணிந்து மோட்டார் சைக்கிளோட்டி, கார் ஓட்டுநர்களைப் பயமுறுத்தி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். பேய் வேடமணிந்து அனைவரையும் பயமுறுத்தும் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலானது

