இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து உரையாடினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்!

புதுடில்லி ஆக 22-
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை இரவு வந்தாா். பிரதமராக அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.

இந்தியா-மலேசியா இடையே 8 ஒப்பந்தங்கள் – பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டன

இந்நிலையில் புதுல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி – அன்வா் இப்ராஹிம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles