
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 28-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நீரில் புதையுண்ட இந்திய பிரஜை விஜயலெட்சுமி இன்னும் மூன்று தினங்களில் கிடைத்து விடுவார் என்று பிரபல ராஜா போமா தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை விஜயலெட்சுமி புதையுண்டார்.
கடந்த ஆறு தினங்களாக அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை புரிந்த ராஜா போமா அங்கு சில சடங்குகளை நடத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்னும் மூன்று தினங்களில் விஜயலெட்சுமி கிடைத்து விடுவார் என்று அவர் சொன்னார்.

நான் மந்திரத்த தண்ணீரை தேடும் இடத்தில் போட்டால்
தேடும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதுவும் நடக்காது.
மேலும்
மூன்று தினங்களில் விஜயலெட்சுமி உடல் மிதந்து மேலே வரும் என்று ராஜா போமா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

