உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்கள்முன்னிலை பணியாளர்களாக வேலை செய்ய தடை விதிப்பது முறையல்ல!

கோலாலம்பூர் ஆக 28-
உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்கள் முன்னிலை பணியாளர்களாக வேலை செய்ய தடை விதிப்பது முறையல்ல என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.

முன்பு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி தர மறுத்தது.

இப்போது ஷா ஆலம் நகராண்மைக் கழகமும் இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறது.

இந்த புதிய உத்தரவு உணவகங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை எதிர் நோக்கி இருக்கும் இந்திய உணவகங்களுக்கு இப்போது புதிய உத்தரவால் மேலும் நெருக்கடியை உண்டாகும் என்று அவர் சொன்னார்.

இந்திய பாரம்பரிய உணவு தொழிலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மக்களுக்கு சுவையான உணவை வழங்கி வருகிறோம்.

உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்கள் முன்னிலை பணியாளர்களாக வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles