
காளிதாஸ் சுப்ரமணியம்
மா பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 28-
நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் இன்னமும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சினை எதிர் நோக்கி வருகிறது.
பிரிமாஸ் ஏற்கெனவே gantian எனப்படும்
மாற்றுத் தொழிலாளர்கள் கோரிக்கையை முன் வைத்தது.
முன்பு மனிதவள அமைச்சராக இருந்த சிவகுமார் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன் வந்தார்.
ஆனால் இப்போது அவர் அமைச்சராக இல்லை. இருப்பினும் மாற்றுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும் என்று டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி கேட்டுக் கொண்டார்.
இந்திய உணவகங்களில் வேலை செய்வதற்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லை.
உணவகங்களில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
அப்போதுதான் எங்களால் தொடர்ந்து வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும்.
மாற்றுத் தொழிலாளர்களும் கிடைக்கவில்லை என்றால் இந்திய உணவகங்கள் கடுமையான நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும்.
ஆகவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்திற்கு உதவ முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று தலைநகரில் அதன் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தேசிய வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் இந்த ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

