
கோலாலம்பூர்: ஆக 28-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் மீண்டும் ஒரு நில அமிழ்வு சம்பவம் நிகழ்ந்துள்ளதை தொடர்ந்து அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கடந்த வாரம் நடைப்பதை உள்வாங்கி சரிந்து விழுந்ததில் இந்திய பிரஜை விஜயலெட்சுமி புதையுண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆறு நாட்களாக விஜயலட்சுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்ந சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் மற்றொரு நில அமிழ்வு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்றிரவு நடந்த நில அமிழ்வு, கடந்த வார சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அடுத்தடுத்து நில அமிழ்வுகள் நிகழ்ந்து வருவதால் அப் பகுதி வணிகர்களும் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

