
கோலாலம்பூர்: ஆக 29-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மற்றொரு நில அமிழ்வு சம்பவம் நேற்று ஏற்பட்டது.
இதனால் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிற்குள் நுழைய அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதி என்று காவல்துறையின் மஞ்சள் நிற நெகிழி பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலிருந்து ஜாலான் புனுஸ் வரை இந்த தடை பகுதியைக் காவல்துறை விரிவாக்கம் செய்துள்ளனர்
இருந்தும் நடைபாதையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் வழக்கம் போல் நடந்து செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை சுற்றுவட்டாரங்களில் தடை விதிக்கும் நடைமுறை குறித்து விரிவாக்கம் செய்ய போலிஸ் கலந்தாலோசித்து வருவதாக டாங் வாங்கி காவல்துறை தலைவர் சுலைஸ்இ அஃபன்டி கூறினார்.

