
நாகை: ஆக 30-
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து ‘ஆவே மரியா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

