

குழுவாங், செப் 14-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சைட் ஹூசேன் சைட் அப்துல்லாவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் சின் தோங்கின் சிறப்பு அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசு சார்பில் தேசிய முன்னணி போட்டியிடுகிறது.
இந்த தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி தற்காத்துக் கொள்ள தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்குவோம் என்று அவர் சொன்னார்.
இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஜசெக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் வாக்குகளும் தேசிய முன்னணிக்கு கிடைக்க உறுதி செய்வோம் என்றார் அவர்.
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியானது அடுத்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசு வெற்றி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும்.
மேலும் ஒற்றுமை அரசு ஜொகூர் மாநிலத்தில் சிறந்த முறையில் வெற்றி நடை போட வழிவகுக்கும் என்பதோடு அரசு ஜொகூர் மாநில மக்களுக்கு ஒரு நல்ல அரசாங்கமாக ஒற்றுமை அரசு விளங்கும் என்று அவர் சொன்னார்

