
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் இந்திய சமுதாயம் துணிந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ். பக்தவச்சலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயம் விலை போகும் சமுதாயம் அல்ல.
தனது உரிமைகளை தட்டிக் கேட்கும் போராளிகள.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலரும் புதிய பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் நாம் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் பாமி பாட்சில் வெற்றிக்கு பக்தவச்சலம் தலைமையில் கெஅடிலான் தலைவர்களான ரேமன், மணியம், வெங்கெட், மகேஸ்வரி, குணா ஆகியோர் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

