லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்!தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் வெடிகுண்டாக மாறியது எப்படி?..

பெய்ரூட்: செப் 19-
லெபனான், சிரியாவில் நேற்று ஒரே நேரத்தில் பேஜர்கள் ெவடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 400 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளனர்.

தைவான் தயாரிப்பு ‘பேஜர்’ வெடிகுண்டாக மாறி வெடித்து சிதறியதால், இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் நேற்று லெபனானில் ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ‘பேஜர்’ எனப்படும் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது.

தீவிரவாதிகள் மட்டுமின்றி மக்களின் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பேஜர்கள், லெபனான் மட்டுமின்றி அண்டை நாடான சிரியாவிலும் வெடித்து சிதறியது.

நேற்றைய நிலவரப்படி ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர். 2,750 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையில், பேஜர்களை பயன்படுத்துவோர், அதனை உடனடியாக தூக்கி எறியுமாறு லெபனான் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பை இஸ்ரேலின் சதி என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

இது இஸ்ரேலின் தீவிர தொழில்நுட்பத் (சைபர்) தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதை லெபனான் அதிகாரிகள் உறுதியாகக் கூறினாலும், இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles