மோசடி கும்பலால் முதியவர் 184,000 ரிங்கிட்டை இழந்தார்!

குவாந்தான், செப் 25 புக்கிட் அமான் காவல்துறை அதிகாரியாக வேஷமிட்ட மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட முதியவர் 184,000 ரிங்கிட்டை இழந்தார்.

அந்த 75 வயது முதியவருக்கு சந்தேக நபரிடமிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்நபர் ஓய்வூதியதாரரின் கணக்கு எண் பணமோசடி நடவடிக்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹ்யா ஓத்மான் தெரிவித்தார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வங்கிக் கணக்கைத் திறக்குமாறு அறிவுறுத்தியதாகவும், வங்கி நெகாராவின் சோதனைக்காக அனைத்துப் பணத்தையும் அந்தக் புதிய கணக்கிற்கு மாற்றுமாறு கூறியதாகவும் யாஹாயா கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் RM184,000 பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கித் தகவல்களையும் சந்தேக நபருக்கு வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை. தாம் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்து கொண்ட அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles