செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூவருக்கு ஊக்கத் தொகையாக ரூ 90 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை: செப் 26-

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் 2 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான நாத் நாராயணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ25 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை வழங்கினார்.

அணியின் தலைவரான நாத் நாராயணனுக்கு ரூ15 லட்சம் என மொத்தம் ரூ90 லட்சத்துக்கான் காசோலைகளை வழங்கிய தமிழ்நாடு முதல்வர், அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles