தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் புத்தகத்தை தயாரித்த தேவகிக்கு பாராட்டுக்கள் !டத்தோஸ்ரீ சரவணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் செப் 27-

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வர்ணம் தீட்டும் புத்தகத்தை தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கும் தேவகியின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

அவருக்கு நாங்கள் உதவினோம்.இது ஒரு சின்ன உதவிதான். சின்ன உதவிகள்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இந்த உதவியானது ஒரு ஓவியரை உண்டாக்கலாம். இந்த முயற்சியை முன்னெடுத்த தேவகிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.

கண்ணதாசன் அறவாரியமும் கூட்டரசுப் பிரதேச மஇகாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் நூல் வழங்கும் விழா இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மஇகா ஒருபோதும் பின் தங்கியதில்லை.

தமிழ்ப்பள்ளிகளின் காவலன் மஇகாதான் என கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்த மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளியின் பிரதிநிதிகளுக்கும் புத்தகங்களை டத்தோஸ்ரீ சரவணன் எடுத்து வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles