உதவிகள் தேவைப்படுவோருக்கு கரம் கொடுப்போம் ! மலேசிய தெலுங்கு சங்கம் வலியுறுத்து

பேரா மாநிலத்தில் கிந்தா தெலுங்கு சங்கம் அதன் 60 ஆவது விழாவை இன்று ( 29-4-24) ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டலில சிறப்புடன் நடத்தியது.

இந்த விழாவில் சுமார் 500 ககும மேற்பட்டோர் கலந்து சிறப்பித்ததுடன் அதில் கலாசார படைப்புகளும் இடம் பெற்றது.

இந்த நாட்டில் வாழக் கூடிய அனைவரும் தங்களின தாய் மொழி கல்வி , கலை கலாச்சாரத்தை காக்க ஊக்குவிக்கபடுபோல் தெலுங்கு வம்சாவளியினர் தங்களின் மொழி், கலாச்சாரத்தை காக்க பாடுபட்டு வருகிறது.

இனம் மொழி வேறுபட்டாலும் மலேசியர்களாக வாழ்ந்த வரும் நாங்கள் இன வேறுபாடின்றி பிற இன மக்களின் தேவைகளுக்கும உதவும் மனப்பான்மைக்
கொண்டுள்ளோம் என்று மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் . வெங்கட் பிரதாப் கூறினார்.

அந்த வகையில் கேரளாவில் அண்மையில். மண் சரிவில் உயிரிழந்த மக்களுக்கு மலேசிய தெலுங்கு சங்கம் உதவி கரம் நீட்டியுள்ளது என்றார்.

இங்குள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற கிந்தா தெலுங்கு சங்கத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்ட அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தெலுங்கு வம்சாவளியினர் பங்காற்றியுள்ளனர் ..

ஆகவே நாங்கள் அரசாங்கத்திடம் முன் வைக்கும் தேவைகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவிற்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் சிறப்பு வருகை புரிந்தார்..
.
அவர் ஆற்றிய உரையில், ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழி கவ்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் ,

அந்த வகையில் தெலுங்கு வம்சாவளியினர் தங்களின் மொழி கலாச்சாரத்தைக் காக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியதுடன் கிந்தா தெலுங்கு சங்கத்திற்கு 2 ஆயிரத்து 500 ரிங்கிட் மானியத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிந்தா தெலுங்கு சங்கத்தின் தலைவர்
முல்லெட்டி ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் வளரச்சிக்கு பாடுபட்ட முத்த தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வி கலாச்சார படைப்புகளும் இடம் பெற்றது.இதில் மலேசிய தெலுங்கு சங்கத்தின. ஆலோசகர் டத்தோ டாக்டர் அச்சையா குமார் ராவ்,
பொதுச் செயலாளர் சிவ சூரியநாராயணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles