
புத்ராஜெயா, அக் 1– நாட்டின் ஆரோக்கியமான பொருளாதார அடைவு நிலைக்கு ஏற்ப மக்களிடையே வறுமையை துடைத் தொழிப்பதற்கான முயற்சிகளை அதிகப்படுத்துவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
மடாணி பொருளாதார செயல் வடிவத்திற்கேற்ப யாரும் பின்தங்கி விடாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
அவ்வாறு செய்யாவிடில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பானதாக இருந்தாலும் பெரும் பணக்காரர்கள் மற்றும் பரம ஏழைகள் என இரு பிரிவுகளாக நாம் பிளவுபட்டு விடுவோம் என அவர் தெரிவித்தார்.
பெர்னாமா

