இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை!

வாஷிங்டன் : அக் 3-
இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும் என அதிபர் ஜோபிடன் அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது.

இதனால் இஸ்ரேலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட அமெரிக்க ராணுவத்திற்கு ஜோபிடன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை அதிபர் கமலாஹாரீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஜோபிடன் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போரில் இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும் என்றும் அதிபர் பிடன் அறிவித்துள்ளார்.

காசா, லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமேரிக்கா ஆதரவாக இருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles