சிலம்பக் கோர்வை கழகத்தின் சிலம்பப் போட்டியைகோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்

ஷா ஆலம், அக் 3 – சிலாங்கூர் மாநில சிலம்பக் கோர்வை
கழகத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 19. எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில்
நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினர் கலந்து கொண்டார்.

இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய அவர்,
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தைக்
கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றி வரும் சிலாங்கூர் மாநில சிலம்பக்
கோர்வை கழகத்தை தாம் பெரிதும் பாராட்டுவதாக கூறினார்.

போட்டியில் அதிகமான மாணவர்களும் மாணவிகளும் மிகவும்
ஆர்வத்தோடு பங்கேற்றதோடு பல பெற்றோர்களும் பார்வையாளர்களாக கலந்துக் கொண்டது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தமது உரையில் தெரிவித்தார்.

தற்காப்புகலையாக இருந்தாலும் நமது பாரம்பரிய மற்றும் இளம்
தலைமுறையினரை நல்வழிப்படுத்துதற்கு ஒரு தளமாக சிலம்பக் கலை
அமைந்திருப்பதோடுஇந்த விளையாட்டில் அதிகமான மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பிரகாஷ் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles