
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கைப்பூலோ –
சுங்கை பூலோவில் 16 பள்ளிகள் மற்றும் 551 மாணவர்களுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கல்வி உதவி நிதி வழங்கினார்.
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இந்த கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் பாயா ஜெராஸ் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகள், 551 பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு இன்று உதவி நிதிகள் வழங்கப்பட்டது.
7 இடை நிலைப்பள்ளிகளுக்கு டியூசன் கட்டணமாக 70 ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்ட அதே வேளையில் 8 ஆரம்பப் பள்ளிகளுக்கு 40 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
500 பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் கல்வி உதவி நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதே வேளையில் 51 உயர் கல்வி மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்பட்டது.
சுங்கைப்பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்றும் இந்த உதவி தொகைகள் வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
நிதியை பெற்ற பள்ளிகள் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

