குட்வில் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் சூப்பர் மாதர் காப்பகத்திற்கு தீபாவளி அன்பளிப்புகள்

காளிதாஸ் சுப்ரமணியம்

பெட்டாலிங் ஜெயா, அக் 6-
தித்திக்கும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு நாட்டில் மிகவும் புகழ்பெற்ற குட்வில் கால்பந்து கிளப் சார்பில் சூப்பர் மாதர் காப்பகத்திற்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

குட்வில் கால்பந்து கிளப் தலைவர் ரகு நாயுடு மற்றும் துணை தலைவர் சசிதரன் தலைமையில் இன்று காப்பகத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

சிவமணி என்ற பூச்சோங் மணிமேற்கொண்ட அயராது முயற்சியால் இந்த காப்பகத்திற்கு உதவிகள் கிடைக்கப் பெற்றன.

புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பகிஹியா டாக்டர் மனோ பரமசிவம் இன்றைய நிகழ்வுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்வில் கால்பந்து கிளப் உறுப்பினர் மணியம் அப்பார்ட், கலையரசு ஆகியோரும் இன்று கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சூப்பர் மாதர் காப்பகத்திற்கு உதவிகளை வழங்கி வரும் குட்வில் கால்பந்து கிளப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காப்பகத்தின் உரிமையாளர் திருமதி சாந்தி தெரிவித்தார் .

தற்போது இந்த காப்பகத்தில் 17 பேர் தங்கியுள்ளனர்.

இதில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து உதவிகளை வழங்கி வரும் குட்வில் கால்பந்து கிளப் மற்றும் இதர அமைப்புகளிடம் மேன்மேலும் உதவிகளை எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles