
டெல் அவிவ்: அக் 6-
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில், நேற்று நடந்த மற்றொரு தாக்குதலில் அவரது வாரிசாகவும், அந்த அமைப்பின் அடுத்த தலைவராகவும் கருதப்பட்ட ஹசீம் சபீ அதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் காசா முனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு அக். 7இல் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி தந்தது. கடந்த ஓராண்டாக இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு அவர்கள் மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

