நுர் கார்த்தினி கொலை – இரசாயன, சவப் பரிசோதனை அறிக்கைகளை டிச.10ஆம் தேதி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

உலு சிலாங்கூர், அக். 7- நுர் ஃபாரா கார்த்தினி கொலை தொடர்பான
இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் 10ஆம்
தேதி சமர்பிப்பதற்கு இங்குள்ள கோல குபு பாரு நீதிமன்றம் தேதி
குறித்துள்ளது.

அவ்விரு அறிக்கைகளும் இன்னும் தயாராகவில்லை என்று அரசுத் தரப்பு
வழக்கறிஞர் டிபிபி எய்ரின் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத்
தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருள் இஸ்ஸா பாஸ்ரி இந்த வழக்கு
விசாரணைக்கான புதிய தேதியை நிர்ணயித்தார்.

இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகள் இன்னும்
தயாராகவில்லை.

ஆகவே இந்த வழக்கிற்கான புதிய தேதியை
நிர்ணயிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று டிபிபி எய்ரின்
நபிலான கூறினார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லான்ஸ் கார்ப்ரல் முகமது
அலிஃப் மோன்ஜானியின் வழக்கறிஞர் நுர் அய்டா முகமது ஜைனுடின்
இந்த கோரிக்கைக் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

நுர் கார்த்தினியின் குடும்பத்தின் சார்பில் கோ சீ கியான், முகமது
நோராஸிஹான் அட்னான், லுக்மான் ஹக்கிம் அஸ்ஹார் ஆகியோர்
வழக்கை கண்காணிக்கின்றனர்.

கடந்த ஜூலை 10ஆம் தேதிக்கு 15ஆம் தேதிக்கும் இடையே உலு
பெர்ணம், எஸ்கேசி செம்பனைத் தோட்டத்தில் சுல்தான் இட்ரிஸ்
பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நுர் கார்த்தினியை
படுகொலை செய்ததாக முகமது அலிஃப் மீது கடந்த ஜூலை 26ஆம் தேதி
குற்றஞ்சாட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles