நீரில் மூழ்கி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்!

ஜோர்ஜ் டவுன், அக்.7: தஞ்சோங் தொகோங் கடற்கரையில் குளித்துக்
கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று மாலை 6.34 மணியளவில் கடற்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர்
தொலைவில் உள்ள பாறையில் ஏ.சேகர் (44) என்ற அந்நபரின் உடல்
கரை ஒதுங்கியது.

உள்ளூர்வாசியான சேகர் தனது நண்பருடன் குளிப்பதற்காகக்
அக்கடற்கரைக்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக
வடகிழக்கு மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் சூப்ரிட்டேண் லீ
ஸ்வீ சேக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தீயணைப்பு உறுப்பினர்களால் சேகர் கரைக்கு கொண்டு
வரப்பட்டார், பின்னர் அவ்விடத்தில் மருத்துவக் குழுவினர் அவர்
இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர், என்று லீ ஸ்வீ கூறினார்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles