சுங்கை பூலோ கம்போங் டேசா அமான் தேவிஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது!

சுங்கை பூலோ ஆக 7-
சுங்கை பூலோ கம்போங் டேசா அமானில் அருள் பாலித்து கொண்டிருக்கும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நேற்று சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கோவில் தலைவர் ஐயா ராஜகோபால், துணை தலைவர் சிவகுமார், செயலாளர் விக்ரன் மற்றும் பொருளாளர் முத்து தலைமையிலான நிர்வாகத்தினர் சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

நேற்று சிவராத்திரியின் 4 ஆவது உபயத்தை எஸ்விபி நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் சந்துரு குடும்பத்தினர் ஏற்று நடத்தினர்.

ஆலய குருக்கள் சிவகுரு அவர்கள் ஆகம முறைப்படி மிகவும் சிறப்பாக இந்த பூசையை நடத்தினார்

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் மற்றும் உதவித் தலைவர் ரவி முனியாண்டி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles