தீபாவளி கடைகளை அமைத்தப் பின்னர் கலை நிகழ்ச்சிக்காக கடைகளை அகற்ற சொல்வதா! பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வியாபாரிகள் கொதிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 9
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்திய சிறுதொழில் வணிகர்கள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் 22 தீபாவளி சந்தை கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் நீர் தேக்கம் எதிர் புறத்தில் 22 கடைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் இதர பொருட்களும் இப்போது அடுக்கி வருகிறார்கள்.

ஆனால் திடீரென்று 8 கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தீபாவளிக்காக கலைவிழா நடத்த மேடை அமைக்கப்படுவதால் இந்த எட்டு கடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடைகளை அமைத்த பின்னர் அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று இப்போது உத்தரவு பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம் என்று கடைக்காரர் குணசீலனின் கேள்வியை எழுப்பினார்.

பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியில் எங்களுக்கு கடைகள் கிடைத்துள்ளது.

ஆனால் மேடையை காரணம் காட்டி 8 கடைகளை அகற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தீபாவளி கலைவிழா நடத்த இடம் உள்ளது. அந்த இடத்தில் மேடையை அமைத்து கொள்ளலாம்.

எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles