மருத்துவ பராமரிப்பு துறையில் இந்தியர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்; NCMA தோற்றுனர் சர்மா வலியுறுத்து

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 6-
நர்ஸ் கேர்கீவர் மேனஜ்மெண்ட் அல்லையன்ஸ் (NCMA) நிறுவனம் வெற்றிகரமாக மருத்துவ பராமரிப்பு மேலாண்மை பயிற்சிகளை வழங்கி வருகிறது.

பயிற்சி திறன்கள் மற்றும் பராமரிப்பு மேலாண்மை நிபுணர்களுக்கு மிக உயர்ந்த தரமான பயிற்சி கல்வியை வழங்க இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் பாடநெறிகள் சமீபத்திய மருத்துவ பராமரிப்பு போக்குகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மூன்று மாத கால பயிற்சி திட்டங்கள் என்று மாணவர்களுக்கு இந்த நிறுவனம் தரமான பயிற்சிகளை வழங்கி வருகிறது என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜெ சர்மா ஜெகதீஸ் தெரிவித்தார்.

சுகாதார பராமரிப்பு துறையில் இந்த நிறுவனம் வழங்கும் பயிற்சிகளை சுகாதார நிபுணர்களால் வழங்கப்பட்டுவருகிறது.

சுகாதார பராமரிப்பு மேலாண்மை துறையில் அதிக அளவில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இந்த துறைக்கு அதிக எதிர்பார்ப்பு என்பதால் இந்தியர்கள் துணிந்து சுகாதார பராமரிப்பு மேலாண்மை துறையில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் இந்த நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற 101 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles