தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு பிரதமர் துறை நிதி வழங்கியது!

தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதியில் ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு பிரதமர் துறையின் கீழ் 15 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.

அண்மையில் சிறப்படன் மகா கும்பாபிஷேகம் கண்ட இந்த ஆலயம்
சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்திற்கு நிதிக்கான கோரிக்கையை பிரதமர் துறை இலாகாவின் கவனத்திற்கு ஆலய நிர்வாகம் கொண்டுச் சென்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் இந்த நிதியை ஆலயத்திற்கு நேரடியாக வருகை அளித்து ஆலய நிர்வாகத்தினரிடம் நிதிக்கான மாதிரி காசோலையை வழங்கினார்.

இந்த நிதி போதாது என்றாலும் எதிர் வரும் காலங்களில் ஆலயத்திற்கு மேலும் நிதி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்முக்கன் இந்த நிதியை வழங்கினார். நிதிக்கான காசோலையை பெற்றுக்கொண்ட ஆலயத் தலைவர் ராஜேந்திரன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநில இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன். சந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles