விலாயா மாநில ஜசெக தேர்தலில் டிக்கம் லூர்ட்ஸ் – பரமசிவம் வெற்றி!

கோலாலம்பூர் அக் 14-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற விலாயா மாநில ஜசெக உச்சமன்ற மற்ற தேர்தலில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் மற்றும் பரமசிவம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 191 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ 180 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்த வேளையில் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கோக் வாய் 179 வாக்குகள் பெற்று 4 ஆவது இடத்தை பிடித்தார்.

டிக்காம் லூர்ட்ஸ் 148 வாக்குகள் பெற்று 8 ஆவது இடத்தை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லான் 137 வாக்குகள் பெற்று 12 ஆவது இடத்தையும் பரமசிவம் 132 வாக்குகள் பெற்று 12 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் 121 வாக்குகள் பெற்று 14 ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles