
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர்: அக் 16-
தமிழன் விருதளிப்பு விழாவில் பத்திரிகை, ஊடகம், சட்டத் துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி அங்கீகரிக்கப்படுவர்கள் என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் தெரிவித்தார்.
புரட்சி இயக்கமும் ஐசெட் இயக்கமும் இணைந்து இத்தமிழன் விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது..
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் இவ்விருது விழா வரும் அக்டோபர் 19ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெட்டாலிங்ஜெயா சிவிட் செண்டரில் நடைபெறவுள்ளது.
கலைஞர்கள், வர்த்தகர்களுக்கு விருது வழங்குவது தான் வழக்கம்.
ஆனால், தமிழன் விருது விழாவில் பத்திரிக்கை, ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
எஞ்சிய விருதுகள் சட்டத் துறையை சேர்ந்தவர்களுக்கு ம் முன்னாள் போலீஸ் படை வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு தேர்வாளர்களை கொண்டு இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விழா நிச்சயம் தகுதியான சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விழாவாக இருக்கும் என்று உமாகாந்தன் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் சிறப்பு வருகை புரிந்து விருதுகளை எடுத்து வழங்கி சிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

