
கோலாலம்பூர் அக் 17-
(Kopi) கோப்பி என்ற நாயை சுட்டு கொன்றது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை என்று உரிமைக் கட்சி பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரங்கானு ஊராட்சி மன்றம் கோப்பி ( kopi) என்ற நாயை சுட்டு கொன்றதாக வெளியான செய்தி மக்களிடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 4 உலக விலங்கு நாள் உலக முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
விலங்குகளின் நலனுக்காக,உலகம் முழுவதும் இருக்கும் விலங்கு நல இயக்கங்கள் அதற்கான வேலையை செய்து கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.
இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.எல்லாம் உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.
இந்த உலகத்தில் உள்ள அத்தனை கோடி உயிரினங்களில் மனிதன் நாம் ஒரு துளிதான்.
மனிதர்கள் நாம் உயிருடன் வாழ்வதற்கு நுண்ணுயிரிகள் தொடங்கி விலங்குகள் வரையிலும் தொடர்பு இருக்கிறது. பூமியில் விலங்கினம், மற்ற உயிரினம் இல்லாமல் மனித இனம் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது.
மனிதனை விட சில நேரங்களில் விலங்குகள் பன்மடங்கு மேம்பட்டவையாக விளங்குகிறது. அதற்கு உதாரணம், இயற்கைப் பேரிடர்களை சில உயிரினங்களால் முன்கூட்டியே உணரமுடியும்.
ஆனால் சில மனிதர்கள் பூமி மனிதனுக்கு மட்டுமே என எண்ணி
இதுபோன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல் மனித அறநெறி வாழ்வுக்கு சிறிதும் பொருந்தாது.
நமது *தெய்வ புலவர் திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,
*என்கிறார், அதன் பொருள்
எல்லா உயிர்களும் சமமானதே. இதை சர்வாதிகார சிந்தனை கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலை மாறவேண்டும் , மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் இவர்களுக்கு வர வேண்டும். கோப்பி ( Kopi) நாயின் இறப்பிற்கு நீதி கிடைக்க கிடைக்க வேண்டும் மற்றும், இது போன்ற செயல்கள் வரும் காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம்
விலங்குகளுக்கான முறையான வாழ்விடங்களை உருவாகுவதோடு, அதை பாதுகாக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கணேசன் கேட்டுக்கொண்டார்.

