கோலாலம்பூர் அக் 22-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கண்டிப்பாக தீபாவளி கலை விழா நடத்தப்படும்.
இந்த கலை விழா இந்திய வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்டிப்பாக நடத்தப்படும்.
இந்த கலை விழாவுக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒரு அற வாரியம் இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறது.
விலாயா மாநில அமைச்சர் டாக்டர்
சலேஹா முஸ்தபா மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். என்று கலை விழா ஏற்பாடுகளை செய்து வரும் தயாளன் ஸ்ரீ பாலன் தெரிவித்தார்.
இதனிடையே இன்று விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் பிரிக்பில்ட்ஸ் லிட்டில் இந்தியா வியாபாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.