
மாஸ்கோ: அக் 23-
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றடைந்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்தார். புடினின் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

