
வாஷிங்டன்: அக் 23-
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால்குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ‘டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில்’ என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவருக்கு 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
ராய்ட்டர்

