சமூகநலன் உதவிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு காலத்திற்கு உகர்ந்தது – சிவகுமார்!!

கோலாலம்பூர்,அக்23:சமூகநலன் இலாகாவின் உதவிநிதி திட்டம் காலத்திற்குரிய உன்னதமானது.இத்திட்டம் வாயிலாக உண்மையாகவே உதவிகள் தேவைப்படுவோருக்கு,குறிப்பாக முதியோர்,மாற்றுத்திறனாளிகள்,தனித்துவாழும் அன்னையர்கள்,சிறார்கள் மற்றும் ஏழ்மை நிலை குடும்பங்களுக்கு முறையாகவும் அதேவேளையில் சரியாகவும் அவ்வுதவி நிதி சென்றடைவதை உறுதி செய்யவும் முடிவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தெரிவித்தார்.இந்த உதவுநிதி திட்டமானது சம்மதப்பட்டவர்களின் நிதிச் சுமையை குறைப்பதோடு அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கான பக்கபலமாகவும் அது விளங்குவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

சமூகநலன் இலக்காவின் பொதுவான உதவிதொகை திட்டமானது சிறார்கள்,முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,பொதுவான உதவி திட்டம் ஆகியவையை உதவி பெறுவோரின் தேவைக்கு ஒப்ப அவ்வுதவிகள் உள்ளடக்கியிருக்கும்.

ஆனால்,2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூகநலன் இலாகாவின் உதவிநிதி திட்டத்திற்காக வெ 5மில்லியனை கடந்தாண்டை விட அதிகமாய் ஒதுக்கியிருப்பது மக்கள் மீதான மடானி அரசாங்கத்தின் அக்கறையையும் பரிவையும் எடுத்துரைப்பதாக சிவகுமார் தெரிவித்தார்.

மேலும், 2024இல் வெ.2.4 பில்லியனாக இருந்த ஒதுக்கீடு 2025இல் வெ.2.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.இந்த உதவிநிதியானது இனம்,மொழி,மதம் கடந்து அரசியல் வேறுப்பாடு இன்றி அனைத்துநிலை மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.நாட்டின் ஏழ்மை நிலை மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு நிச்சயம் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியானது பெரும் நன்மையை ஏற்படுத்தும் என்றும் சிவகுமார் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

அதேவேளையில்,கூடுதலான நிதி ஒதுக்கீடு சமூக நலன் இலாக்காவின் செயல்பாடுகளுக்கும் அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்திறன்களுக்கும் பெரும் பங்களிப்பதோடு நிறைவான நடவடிக்கைகளுக்கும் அது உந்துதலாக அமையும் என்றார்.

நாட்டில் ஏழ்மையை குறைக்கவும் துடைத்தொழிக்கவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தூரநோக்கு இலக்கோடு முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும் என்றும் கூறிய சிவகுமார் நாட்டின் எதிர்காலம் சிறக்கவும் ஏழ்மை நிலை முற்றாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் நாம் ஒவ்வொருவரும் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles