கோலாலம்பூர் நவ 3-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற 100 பிளஸ் குளிர்பான நிறுவனம் மொத்தம் ஆறு மூத்த விளையாட்டாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
பினாங்கு மாநிலத்தை சேர்ந்த பெருநடை வீரர் ஜி.சரவணன் தற்போது நோயால் பதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டதாக 100 பிளஸ் குளிர்பான நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி முகமட் பாவ்சி தெரிவித்தார்.
பரா மேசை பந்து விளையாட்டாளர் டேவிட் சேரன், சங்கர நாற்காலி ஓட்டப் பந்தய வீராங்கனை பாலி முனுசாமி, உடல் கட்டழகர் பலவேந்திரன், விக்னேஸ்வரன், கராத்தே வீரர் கிரிஜிஸ்வரன் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.