மா.பவளச்செல்வன்
செர்டாங், நவ 2-
தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி சுரேஸ்குமார் இன்று தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.
செர்டாங் இகுனி பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பொது உச்சரிப்பில் முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கலந்து சிறப்பித்தார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், டத்தோ நரேன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், சங்கத்தின் உதவித் தலைவர் காளிதாசன் இளங்கோ,ஜீவாராஜா, செயலவை உறுப்பினர் பவளச்செல்வன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுரேஸ்குமார் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.