மூன்று உடன் பிறப்புடன் அல்லல்படும் ஜோசலினுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவிக்கரம்!

பெட்டாலிங் ஜெயா, நவ 2-
கடந்த சில மாதங்களாக ஜோசலின் தனது மூன்று உடன் பிறப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் எவ்வாறு சிரமப்படுகிறார் என்பதை எஃப்எம்டி செய்தி வழி அறிந்து, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஜோசலின் தேவி வ மற்றும் அவரது உடன் பிறப்புகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி வாழ்த்து கூறி தனது அரசியல் செயலாளர் சுரேஸ் அகமட் போர்ஹான் மூலம் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

27 வயதான ஜோசலின் தேவி தனது தந்தை காலமானதிலிருந்து தனது மூன்று உடன்பிறப்புகளுக்கு ஒரே வருவாய் ஈட்டுபவராக இருந்து கவனித்து வருகிறார்.

மேலும் அவரது பிலிப்பைன்ஸ் தாயார் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை விட்டு பிலிப்பைன் சுக்குத் திரும்பிவிட்டார்.

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்றும் சுமையை ஏற்க வேண்டும் என்று தனக்கு பணிக்கப்பட்டதாக ஜோசலின் கூறினார்.

“இன்னும் பள்ளியில் இருக்கும் இரண்டு இளைய உடன்பிறப்புகளும், ஆட்டிஸாம் குன்றிய இளைய சகோதரரையும் அவர் கவனித்துக் கொள்கிறார்.

மேலும் ஜோசலினுக்கு அடையாள அட்டை இல்லாதது. அவர் நிலையை மேலும் கடுமையாக்கி உள்ளது.

அடையாள கார்டு இல்லாததால் நிலையான வேலையில் அமர இடையூறாக உள்ளதையும் அவர் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட பல்வேறு நெருக்குதலுக்கு ஆளான ஜோசபின் அடையாள ஆவணத்திற்கான தனது விண்ணப்பத்திற்கு உதவுமாறு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செயலாளரை அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு மலேசிய இந்தியரான மறைந்த அவரது தந்தையும், பிலிப்பைன்ஸை சேர்ந்த அவரது தாயும் ஜோசலின் பிறந்த பின்னரே தங்கள் திருமணத்தை பதிவு செய்ததால் இதனால் அவருக்கு ஏற்பட்ட அடையாள அட்டை பிரச்சனைக்கான முக்கிய முட்டுக்கட்டை என அறியப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles