லண்டன், நவ 3 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த கிளப்புகள் என்று வர்ணிக்கப்படும் அர்செனல் மற்றும் மென்செஸ்டர் சிட்டி நேற்று அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டன.
முதல் ஆட்டத்தில் நியூகாசல் கிளப்பை எதிர்த்து விளையாடிய அர்செனல் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய போர்னிமவுத் கிளப் 2-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டியை பந்தாடியது.
நள்ளிரவில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியை வீழ்த்தியது.