
ஷா ஆலம், நவ 9- குறைந்த வருமானம் பெறும் வணிகர்களுக்கு வர்த்தக
உபகரண உதவியை வழங்கும் சிலாங்கூர் இந்தியர் சமூக மற்றும்
தொழில் முனைவோர் திட்டத்திற்கு (ஐ-சீட்) இவ்வாண்டு 144 பேரின்
விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கு இவ்வாண்டு மொத்தம் 183 விண்ணப்பங்கள் கிடைக்கப்
பெற்ற வேளையில் அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி
செய்த 144 பேரின் விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டதாக ஐ-சீட் தலைமை
ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி கூறினார்.
கிள்ளான் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு
கடந்த மாதம் கிள்ளானில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பின் போது
வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்ட வேளையில் அடுத்தக் கட்டமாக
கோல சிலாங்கூரில் உபகரண ஒப்படைப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதர மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர்
மாதத்திற்குள் உபகரணங்களை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில்
நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என அவர் சொன்னார்.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உபகணங்களை ஒப்படைக்கும்
பணியை யுபென் எனப்படும் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல்
பிரிவு கோ ஹிஜ்ரா கூட்டுறவுக் கழகம் வாயிலாக மேற்கொண்டு
வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

