தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி முருகன் ஆலய கந்தர் சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்றது!

ஈப்போ நவ 10-
பேரா மாநிலத்தில் உள்ள தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி முருகன் ஆலயத்தில் கந்தர் சஷ்டி விழா சிறப்புடன் நடைபெற்றது.

பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சிறப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடக்தக்கது.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கந்தர் சஷ்டி விழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு முதல் முறையான வள்ளி, தெய்வானை திருமணம் நடைபெற்றது.

ஆலயத்தில் வள்ளி மற்றும் தெய்வானை ஐம்பொன் சிலைகளை பேரா சிம்மோரில் திருமகள் நகைக் கடையை வழி நடத்தி வரும் ராஜலட்சுமி குடும்பத்தினர் வழங்கியுள்ளதாக ஆலயத் தலைவர் எஸ். ராஜேந்திரன் கூறினார்.

இவ்விழா அடுத்தாண்டு மேலும் சிறப்புடன் நடத்தப்படும் என்ற தகவலைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்த ஆலந்தை சிறப்புடன் வழி நடத்தி வருவதுடன் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் ஆலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்த ஆலய நிர்வாகத்தை தஞ்சோங் ரம்புத்தான் இந்து சங்கம் ஆலய நிர்வாக உறுப்பினர்களை பாராட்டி கௌரவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles