துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனின் தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ, நவ 10-
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று மிகப்பெரிய அளவில் தீபாவளி பொது உபசரிப்பை நடத்தினார்.

சுங்கை பூலோவில் நடைபெற்ற இந்த தீபாவளி பொது உபசரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ எம் ரவி, புக்கிட் லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், விலாயா மாநில கெஅடிலான் துணை தலைவர் ஜெயக்குமார், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், சுங்கை பூலோ தொகுதி ம இகா தலைவரும் பிரபல அரசியல் பிரமுகர் செளந்தரராஜன் மற்றும் ம இகா பிரமுகர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

டத்தோஸ்ரீ இரமணன் குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஆடல் பாடல் இன்னிசை விழாவுடன் நடைபெற்ற இந்த தீபாவளி உபசரிப்பில் அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles