செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பெனால்டி கிண்ணப் போட்டியில் மாத்தா எப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது!

செமினி, நவ.12-
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெனால்டி கிண்ண போட்டி 80 குழுக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் திடலில் இப்போட்டி நடைபெற்றதாகப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரண்பாபு தெரிவித்தார். 

இப்போட்டி நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதாகும். இதை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது

இந்நிகழ்வை டூசுன் தூவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸின் சிறப்பு அதிகாரி ஜமிலி மற்றும் சிலாங்கூர் மாநில போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவின் தலைவர் ஹானாஃபி ஜாலாலுடின் ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்வை உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும் உலு லங்காட் பிகேஆர் தொகுதித் தலைவருமான ராஜன் முனுசாமி நிறைவு செய்து வைத்தார்.  



இதில் முதலாவதாக வென்ற மாத்தா எப்சி கால்பந்து குழுவிற்கு வெ.3,000 ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 

2ஆவதாக வென்ற எம்எம்எம் ஆல் ஸ்டார் குழுவிற்கு வெ.1,000 ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 3ஆவது, 4ஆவதாக வெற்றி பெற்ற அவுட்லோவ்ஸ், போபெண்ட் குழுக்களுக்கு வெ.500 ரொக்கம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டதாக சரண்பாபு தெரிவித்தார்.

இந்த போட்டியின் சிறந்த கால்பந்து விளையாட்டாளராக மாத்தா எப்சி கால்பந்து குழுவைச் சேர்ந்த ஸ்ரீதர் தேர்வுச் செய்யப்பட்ட வேளையில், சிறந்த கோல் காவலராக எம்எம்எம் ஆல் ஸ்டார் குழுவைச் சேர்ந்த லெவின்ராஜ் நேசராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜன் முனுசாமி வெற்றி பெற்ற குழுக்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய செமினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.நெடுஞ்செழியன், நிகழ்ச்சியை வழிநடத்திய நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறை துணைத் தலைமை இயக்குநர் பாலமுருகன் குணசேகரன் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயபாலன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles