சுங்கைலாலாங் நவ 12- புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாஸ் அஸிசான் பின் அம்சா மற்றும் சுங்கைபட்டாணி நகராண்மைக்கழக உறுப்பினர் பழனி சுப்பிரமணியம் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து நிகழ்வு இங்குள்ள புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற அலுவலகத்தின் முன் வெகு சிறப்பாக வெகு நடந்தேறியது.
நிகழ்விற்கு நகராண்மைக்கழக மேலாளர் துங்கு இஸ்கந்தார் ஷா துங்கு முஸ்ஸப்பர் ஷா சிறப்பு வருகைத் தந்தார்.
நிகழ்விற்கு வருகைத்தந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர் நகராண்மைக்க்ழக உறுப்பினர் பழனியும்,புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாஸ் அஸிசான் பின் அம்சா அவர்களும்.
நிகழ்வில் கலந்துக் கொண்ட இந்தியர்கள் மட்டும் சிறப்பு குலுக்கல்கள் இடம்பெற்று அனைவரையும் மகிழ்ச்சி படைத்தனர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இந்திய பாராம்பரிய உடையில் கலந்து நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்று உபசரித்தனர்.
படம் விளக்கம்
நிகழ்வில் கலந்துக்கொண்ட நகராண்மைக்கழக மேலாளர் துங்கு இஸ்கந்தார் ஷா,பழனி மற்றும் உஸ்தாஸ் அசிசான் மற்றும் பாஸ் கட்சியின் உயர் அதிகாரிகள்.