
ஷா ஆலம், நவ. 16– குறைந்த வருமானம் பெறும் மக்கள் தங்களுக்கு
தேவையான அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில்
வாங்குவதற்கு ஏதுவாக அடுத்தாண்டு மேலும் 10 ஏஹ்சான் மார்ட்
கடைகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது கோம்பாக், செலாயாங் சதுக்கத்தில் ஒரே ஏஹ்சான் மார்ட் கடை
மட்டும் செயல்பட்டு வருகிறது.
சிலாங்கூர் மாநில விவசாய மேப்ட்டுக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும்
மாநில அரசின் இந்த வர்த்தக ஸ்தாபனத் தொடர் சந்தை விலையைக்
காட்டிலும் 10 முதல் 15 விழுக்காட்டு வரை குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்குகிறது.
மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு
ஏஹ்சான் மார்ட் கடைகள் வீதம் மொத்தம் 56 கடைகளை நிறுவ மாநில
அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
இதனிடையே, இலவச குடிநீர் வழங்கும் ஸ்கிம் ஆயர் டாருள் ஏஹ்சான்
திட்டத்தை மாநில அரசு தொடரும் என்று மாநில சட்டமன்றத்தில்
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது
அமிருடின் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் கினி

