டிரம்பை கொல்ல திட்டமிடவில்லை: அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான்!

வாஷிங்டன்: நவ 17-
டொனால்ட்‘டிரம்ப் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும்’ என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்து ‘அப்படிப்பட்ட எந்த திட்டமும் இல்லை’ என ஈரான் அரசு பைடன் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த போது கடந்த 2020ஆம் ஆண்டில் டிரோன் தாக்குதல் மூலம் ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவ தளபதி காசிம் சுலைமானி பாக்தாத்தில் டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலுக்கு பழிக்கு பழியாக டிரம்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாகவும், சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்பை தீர்த்து கட்ட முயற்சிகள் நடந்ததாகவும் அமெரிக்க உளவுத்துறையான எப்பிஐ சமீபத்தில் பரபரப்பு குற்றம்சாட்டியது.

இவற்றை ஈரான் அரசு மறுத்துள்ளது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles