
ஜெருசலேம்: நவ 17-
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகுயின் வீட்டிற்கு வெளியே திடீரென தீப்பற்றி எரித்தது. இது குண்டுவெடிப்பு தாக்குதலா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து போலீசார் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரதமர் இல்லத்திற்கு வெளியே 2 முறை திடீரென தீப்பிடித்துள்ளது.
இந்த சம்பவம் நடக்கும்போது நெதன்யாகு மற்றும் அவருடைய குடும்பத்தினர வீட்டில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்று இருந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் முன்னே உள்ள கார்டன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இது வெடிகுண்டு தாக்குதல் என கூறப்படுகிறது.
ராய்ட்டர்