பெண் தொழில் முனைவோருக்கு வெ.50,000 வரை பிரத்தியேகக் கடனுதவி

ஷா ஆலம், நவ 17 – மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் கூறியது.

குறிப்பாக சிலாங்கூர் டாருள் ஏஹ்சானில் உள்ள பெண் தொழில் முனைவோர் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை வழங்குகிறது.

விண்ணப்பதாரர்கள் கீழ் காணும் பிரசுரத்தின் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles